புதுச்சேரி : பிள்ளைச்சாவடி திரவுபதியம்மன் கோவில் தீமிதி விழாவில் ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்தி கடன்களைச் செலுத்தினர். பிள்ளைச்சாவடியில் திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவில் 122வது பிரம்மோற்சவ விழா கடந்த 19ம் தேதி துவங்கியது. இதனை முன்னிட்டு தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், இரவு வீதியுலா நடந்து வருகிறது. 24ம் தேதி காலை 11.30 மணிக்கு சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதனை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து திருத்தேரும், மாலை 6 மணி அளவில் தீமிதி திருவிழா நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் தீமிதித்து தங்களது நேர்த்தி கடனைகளைச் செலுத்தினர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில் முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் கல்யாணசுந்தரம், முன்னாள் அமைச்சர் ஷாஜகான், தி.மு.க., தொகுதி செயலாளர் விசுவநாதன், என்.ஆர். காங்., பிரமுகர்கள் ஜெய்சங்கர், வேலு, காலாப்பட்டு தொகுதி இளைஞர் காங்., தலைவர் சிவா உட்பட பலர் கலந்து கொண்டனர்.