புதுச்சேரி : இடையன்சாவடி வர்ணமுத்து மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா வரும் 5ம் தேதி துவங்குகிறது. வானூர் வட்டம் ஆரோவில் அடுத்த இடையன்சாவடி வர்ணமுத்து மாரியம்மன் கோவிலில் செடல் மற்றும் தீமிதி திருவிழா, வரும் 5ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. முன்னதாக, அன்று காலை 6 மணிக்கு விநாயகர், அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடக்கிறது. பிற்பகல் 1 மணிக்கு சாகை வார்த்தல், இரவு சக்தி சிவன் அலங்காரத்துடன் அம்மன் வீதியுலா நடக்கிறது.