Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முத்தாம்பாளையத்தில் காவடி ... சிறுபாக்கம் பங்குனி உத்திர சிறப்பு வழிபாடு! சிறுபாக்கம் பங்குனி உத்திர சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கோலாகலம்!
எழுத்தின் அளவு:
ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கோலாகலம்!

பதிவு செய்த நாள்

04 ஏப்
2015
01:04

ராமநாதபுரம்: ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயிலில் நடந்த பங்குனி உத்திர விழாவில் ஏராளமான பக்தர்கள் காவடி சுமந்தும், பூக்குழி இறங்கியும் தங்களது நேர்த்திக்கடன் செலுத்தினர். இக்கோயிலில் 75ம் ஆண்டு பங்குனி உத்திர விழா மார்ச் 25 ல், காப்பு கட்டுதலுடன் துவங்கியது. இதை முன்னிட்டு சுவாமிக்கு தினமும் பல்வேறு அபிஷேகங்கள், பூஜைகள், ஆன்மிக சொற்பொழிவு, பக்தி இன்னிசை நிகழ்ச்சிகள் தினமும் இரவு நடந்தன.

உத்திர நாளான நேற்று காலை நொச்சிவயல் ஊரணியில் இருந்து பக்தர்கள் தங்களது கண்ணம் மற்றும் முகத்தில் அலகு குத்தி, காவடி, பால்குடங்கள் சுமந்து ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர். தனியார் அமைப்புகள் சார்பில் வழிநெடுக ஆங்காங்கே நீர், மோர் பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். மண்டபம், வேதாளை, இடையர்வலசை, வளநாடு, உச்சிப்புளி, குயவன்குடி உட்பட 51 கோயில் பங்குனி உத்திர விழாக்களில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ராமேஸ்வரம்: பங்குனி உத்திரத்தையொட்டி, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் கிழக்கு வாசலில் உள்ள முருகன் சன்னதி, மேற்கு வாசலில் அமைந்துள்ள பால சுப்பிரமணிய சுவாமி சன்னதி களுக்கு, அகில இந்திய யாத்திரை பணியாளர்கள் சங்கம் சார்பில் பால், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. இதில் யாத்திரை பணியாளர் சங்க தலைவர் முத்துகாமாட்சி, துணை தலைவர்கள் முனியசாமி, மகேந்திரன், செயலாளர்கள் மீனாட்சி சுந்தரம், காசிமுனியாண்டி, சேதுபதி, பொருளாளர் காளிதாஸ் மற்றும் நிர்வாகிகள், பக்தர்கள் பலரும் பங்கேற்றனர். கோயிலுக்குள் சுவாமி சன்னதி அருகே 1008 சங்கு அபிஷேக பூஜை நடந்தது. ராமேஸ்வரம் புதுரோடு, கரையூர், இந்திரா நகர், பாம்பன், தங்கச்சிமடம் போன்ற பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி, பறவை காவடி உள்ளிட்ட பல்வேறு வகையான காவடிகளை சுமந்தும், பால்குடம் எடுத்தும் நேர்த்தி கடன் செலுத்தினர். பரமக்குடி: பரமக்குடி தரைப்பாலம் அருகே சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் காவடி சுமந்து நேர்த்தி கடன் செலுத்தினர். சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் தடம்பார்க்கும் நிகழ்வு நடைபெற்றது. இன்று வைகை ஆற்றில் மீண்டும் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
 சென்னை: மதுரையை தொடர்ந்து, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்குள், அனுமதியின்றி பெண் ஒருவர், சினிமா ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் ஸ்ரீ நடராஜப் பெருமான் தரிசன காட்சி ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் விடிய விடிய தசாவதார ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar