சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த தியாகராஜபுரம் கிராமத்தில் சீதாகல்யாண வைபவம் நடந்தது. விழாவையொட்டி தியாகராஜபுரம் லஷ்மிநாராயண பெருமாள் கோவிலில் கணபதி ஹோமத்துடன் சீதா கல்யாண பட்டாபிஷேக மகோற்சவம் துவங்கியது. ஸ்ரீராமநவமியை முன்னிட்டு காலை உஞ்சவுர்த்தியும், இரவு அஷ்டபதி மற்றும் திவ்யநாம பஜனை நடந்தது. நேற்று முன் தினம் காலை சீதாகல்யாண வைபவம், நேற்று பட்டாபிஷேகமும் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பிரதோஷ வழிபாட்டு மன்ற தலைவர் விஸ்வநாத கணபாடிகள், ராஜப்பா, ரமணன் ஆகியோர் செய்திருந்தனர்.