பதிவு செய்த நாள்
07
ஏப்
2015
12:04
அவிநாசி : கருவலூர் கோவிலில் நாளை தேரோட்டம் நடக்கிறது; பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கருவலூர் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, கடந்த 4ல், கொடியேற்றத்துடன் துவங்கியது; இன்று, திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. நாளை காலை, தேரில் அம்மன் எழுந்தருள்கிறார். மாலை 4:00 மணிக்கும், நாளை மறுநாள் மற்றும் 10ம் தேதியும், தேரோட்டம் நடைபெற உள்ளது.விழா பாதுகாப்பு ஏற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம், கோவில் வளாகத்தில் நேற்று நடந்தது; தாசில்தார் ரமேஷ் தலைமை வகித்தார். செயல் அலுவலர் சரவணபவன் வரவேற்றார். இன்ஸ்பெக்டர் வெற்றிவேல்ராஜன், தங்கவேல், அறங்காவலர்கள் அர்ச்சுனன், லோகநாதன், ஊராட்சி தலைவர் அவிநாசியப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பக்தர்களுக்கான பாதுகாப்பு, குடிநீர் வசதி, அன்னதானம் வழங்கும் இடங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.