வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே புராதனக் கோயிலான அழகிய மணவாளப்பெருமாள் கோயில் வருஷாபிஷேக விழா நேற்று விமரிசையாக நடந்தது. இக்கோயில் மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள அர்ஜூணாபுரம் கிராமத்திற்கு அருகே அர்ஜூணா நதிக்கரையில் அமைந் துள்ளது. மூலவரான அழகிய சாந்தவண்ண மணவாளப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக எழுந்தருளியுள்ளார். பத்மாவதி தாயார், கரு டாழ்வார் தனித்தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளனர். பஞ்சபாண்டவர்கள் வனவாசம் சென்றபோது இங்கு தங்கி இறைவனை வழிபட்டதாக இதன் புராண வரலாறு கூறுகிறது. பழமை வாய்ந்த இக்கோயில் அக்காலத்தில் ஆண்ட பாண்டிய மன்னர்களால் விரிவாக்கம் செய்து கட்டப்பட்டது. பி ன்னர் பராமரிப்பின்றி புதர்மண்டி கிடந்தது. கடந்த இருவருடங்களுக்கு முன் பக்தர்கள் நன்கொடை, அரசு நிதி மூலம் பல லட்சரூபாய் செலவில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு கடந்த வருடம் கும்பாபிஷேகம் நடந்தது. இதற்கான முதல் வருஷாபிஷேக விழா நேற்று கோயிலில் வெகு விமரிசையாக நடந்தது. அதிகாலையில் வேதவிற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க யாகபூஜைகள் துவங்கியது. பெருமாளுக்கும், பத்மாவதி தாயா ருக்கும் 18 வகை அபிஷேகங்கள் செய்யப்பட்டது. பின்னர் யாகபூஜையில் பூஜிக்கப்பட்ட நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து சர்வ அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமியை ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். பக்தர்கள் ஆயிரத்தெட்டு விஷ்ணு சகஸ்கரநாம பாராயணம் செய்து வழிபட்டனர். அன்னதானம் நடந்தது. பக்தர்கள் ஏற்பாடு செய்தனர்.