ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நேற்று கோயில் இணை கமிஷனர் செல்வராஜ் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, பர்வதவர்த்தினி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மூலம் திருக்கல்யாண மண்டபத்தில் எண்ணப்பட்டன. இதில், ரூ. 62 லட்சத்து 16 ஆயிரத்து 475 ரொக்கம், 75 கிராம் தங்கம், 5 கிலோ 370 கிராம் வெள்ளியை காணிக்கையாக பக்தர்கள் செலுத்தி இருந்தனர். கண்காணிப்பாளர்கள் கக்காரின், ராஜாங்கம், பேஷ்கார்கள் ராதா, அண்ணாத்துரை, கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.