விழுப்புரம் : விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் ஸ்ரீ திரவுபதி அம்மன் கோவிலில் சுவாமி வீதியுலா நடந்தது.விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் ஸ்ரீ திரவுபதி அம்மன் கோவிலில் வரும் 10ம் தேதி தீமிதி திருவிழா நடக்கிறது. இதையொட்டி நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.