பதிவு செய்த நாள்
08
ஏப்
2015
01:04
சூலுார் : சூலுார் ஸ்ரீ ராம மந்திரத்தில் ஸ்ரீ ராம நவமி விழா ஒன்பது நாட்கள் கொண்டாடப்பட்டது. சூலுார் ராமசாமி அய்யர் வீதியில் உள்ள ஸ்ரீ ராம மந்திரம் பழமையானது. இங்கு, 66வது ஸ்ரீ ராம நவமி மஹோத்ஸவம், ஹோமம், பஜனை, கச்சேரி என ஒன்பது நாட்கள் வழிபாடுகள் நடந்தன. கடந்த, 28ம்தேதி காலை மகா கணபதி, நவக்கிரஹ ஹோமத்துடன் விழா துவங்கியது.மாலை விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் நடந்தது. தினமும் உபநிஷத், ருத்ரம், பகவத்கீதா சம்பூர்ண பாராயணம், லலிதா சகஸ்ரநாமம், வெங்கடேஷ சுப்ரபாத பாராயணம் செய்யப்பட்டது.இன்னிசை கச்சேரி, உபன்யாசம், பஜனைகள் நடந்தன. 5ம்தேதி காலை உஞ்சவிருத்தி பஜனை ஊர்வலம் நடந்தது. 8:00 மணிக்கு சீதா கல்யாண உற்சவம், 1:30 மணிக்கு ஆஞ்சநேய உற்சவம் நடந்தது. தொடர்ந்து பிரசாதம் வழங்கப்பட்டது.