பதிவு செய்த நாள்
08
ஏப்
2015
01:04
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவில் வரும் மே 1ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதையொட்டி, யாகசாலை அமைக்கும் பணி விறுவிறுப் பாக நடந்து வருகிறது. சிதம்பரம் நடராஜர் கோவில் கும்பாபிஷேகம் வரும் மே 1ம் தேதி நடைபெற உள்ளது. 28 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற உள்ள கும்பாபிஷேகத்திற்காக, கடந்த சில மாதங்களுக்கு திருப்பணிகள் துவங்கியது. அதில், நடராஜர் மூலவர் சன்னதி சீரமைக்கும் பணியை முன்னிட்டு நடராஜர், அம்பிகை தேவ சபைக்கு பிரவேசம் செய்யப்பட்டது. இந்நிலையில், கும்பாபிஷேகத்திற்கான யாக சாலை பூஜை வ ரும் 22ம் தேதி துவங்குகிறது. அன்று காலை கூச்சாண்ட ஹோமம், கணபதி ஹோமம் நடக்கிறது. 23ம் தேதி வாஸ்து சாந்தி, நவக்கிரக ஹோமம், மகா சங்கல்பம் நடைபெறுகிறது. 24ம் தேதி தனபூஜை நடக்கிறது. 25ம் தேதி கலாகர்ஷணம், கடஸ்தாபனம், தீபாராதணை, முதல் கால யாக சாலை பூஜை நடை பெறுகிறது. தொடர்ந்து 26ம் தேதி 2ம் கால மற்றும் 3ம் கால யாக சாலை பூஜையும், 27ம் தேதி 4ம் கால யாக பூஜை, 5ம் கால யாக பூஜை, மகா பூ ர்ணாகுதி தீபாராதனை நடக்கிறது. 30ம் தேதி வரை 12 கால யாக சாலை பூஜைகள் நடக்கிறது. மே 1ம் தேதி காலை தம்பதி பூஜை, வடுக பூஜை, சுவாசினி பூஜை, கன்யா பூஜை, கோ பூஜை, கஜ பூஜை, அஸ்வ பூஜையும் அதனைத் தொடர்ந்து கும்பங்களின் யாத்ராதானம் நடக்கிறது. பின்னர் காலை 7.00 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் சித்சபை, ராஜ சபை, நான்கு ராஜ கோபுரங்களுக்கும் கும்பாபிஷேகம் நடக்கிறது. கும்பாபிஷேகத்திற்காக தற்காலிக பஸ் நிலையம் புறவழிச்சாலை எலிபேடு உள்ள இடத்தில் மாற்றம் செய்யப்படுகிறது. சிதம்பரம் தற்போது உள்ள பஸ்நிலையம், வெளியூரிலிருந்து வரும் கார், வேன்கள் நிறுத்தப்பட உள்ளது.