பதிவு செய்த நாள்
09
ஏப்
2015
10:04
திருத்தணி: அம்மன் கோவிலில் நடந்து வரும் தீமிதி திருவிழாவில், நேற்று, அர்ச்சுனன் தபசு நடந்தது. இதில், திரளான பெண்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். திருத்தணி, காந்தி நகரில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில், தீமிதி திருவிழா, கடந்த மாதம், 26ம் தேதி துவங்கியது. தினசரி, மூலவர் அம்மனுக்கு, சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. பிற்பகல், மகா பாரதமும்; இரவு, நாடகமும் நடந்து வருகின்றன. ÷ நற்று காலை 9:00 மணிக்கு, அர்ச்சுனன் தபசு நிகழ்ச்சி நடந்தது. இதற்காக, கோவில் முன் பனை மரம் நடப்பட்டு, அர்ச்சுனன் தபசு ஏறும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது, சில திருமணமான பெண்கள், குழந்தை பாக்கியம் வேண்டி, புனிதநீராடி, ஈர புடவையுடன் பனை மரத்தின்கீழ் படுத்து, தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். இந்நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, அம்மனை வழிபட்டனர்.