பதிவு செய்த நாள்
09
ஏப்
2015
10:04
வில்லியனூர்: சிவசக்தி வேல்முருகன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. வில்லியனூர் அடுத்த வடமங்கலம் கிராமத்தில், புதிதாக கட்டப்பட்ட ஏழை மாரியம்மன், சிவசக்தி வேல்முருகன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று காலை நடந்தது. காலை 7:00 மணியளவில், நான்காம் கால யாகபூ ஜை, காலை 9:15 மணிக்கு, ஏழை மாரியம்மன் ஆலய விமான கும்பாபிஷேகம், 10:15 மணிக்கு, சிவசக்தி வேல்முருகன் ஆலய விமான கும்பாபிஷேகம், மூலஸ்தான பரிவார கும்பாபிஷேகம், தீபாராதனை நடந்தது.முதல்வர் ரங்கசாமி, தேனீ ஜெயக்குமார் எம்.எல்.ஏ., என்.ஆர். காங்., பிரமுகர் சுகுமாரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.