ஜம்மு: காஷ்மீர் மாநிலம் அமர்நாத்தில், பனி லிங்கத்தை தரிசிக்க, 2,000க்கும் அதிகமான பக்தர்கள் நேற்று யாத்திரை மேற்கொண்டனர். காஷ்மீரில் அமர்நாத் குகையில், ஒவ்வொரு ஆண்டும் உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க, லட்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்வது வழக்கம். இந்த ஆண்டுக்கான யாத்திரை நேற்று துவங்கியது. இதற்காக, இரண்டரை லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். முதல் கட்டமாக நேற்று, 2,096 பக்தர்கள் ஜம்முவிலிருந்து புறப்பட்டனர். காஷ்மீர் கலாசாரத் துறை அமைச்சர் நவாங் ரிக்சின் ஜோரா கொடியசைத்து யாத்திரையை துவக்கி வைத்தார். வரும் ஆகஸ்ட் 13ம்தேதி வரை இந்த யாத்திரை முடிகிறது. பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் உள்ளதால், பகல்காம் மார்க்கத்திலும், குறுக்கு வழியான பால்டால் மார்க்கத்திலும், 10 ஆயிரம் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.