வத்தலக்குண்டு : கீழக்கோயில்பட்டியில் பகவதி அம்மன் கோயில் திருவிழா நடந்தது. செவ்வாய் இரவு அம்மன் மருதாநதி ஆற்றில் இருந்து அலங்காரம் செய்யப்பட்டு வாணவேடிக்கையுடன் அழைத்து வரப்பட்டார். மண்டகப்படிகளில் எழுந்தருளி காட்சியளித்து வீதி உலா வந்தார். நேற்று முன்தினம் அம்மனுக்கு மாவிளக்கு, பொங்கல் படைத்து வழிபட்டனர். கிடா வெட்டப்பட்டு அசைவ உணவு விருந்து நடந்தது. பெண்கள் கும்மியடித்து வழிபட்டனர். நேற்று மாலை அம்மன் மஞ்சள் நீராட்டுடன், பெண்கள் முளைப்பாரியுடன் வீதி உலா வந்து பூஞ்சோலை சென்றடைந்தார். விழா ஏற்பாடுகளை பாலகிருஷ்ணன், கருப்பணன், முருகேசன், ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர். கலைநிகழ்ச்சிகள் நடந்தன.