சிவன்கோயிகளில் சிவனுக்கு செய்யப்படும் அர்ச்சனைகளில் பஞ்சமுகார்ச்சனை முக்கியமானது. ஐந்து நபர்கள் ஐவகை வில்வம் கொண்டு ஒரே காலத்தில் அர்ச்சனை செய்து ஐவகை நிவேதனம் செய்து, ஐந்து கிளை கொண்ட ஐந்து ஆரத்தியால் சிவலிங்கத்தை ஆராதனை செய்யும் நிகழ்ச்சியே பஞ்சமுக அர்ச்சனை. சிவலிங்கமூர்த்தியில் முகம் இல்லாவிட்டாலும், அவருடைய ஐந்து முகங்களை அர்ச்சிப்பதாக பாவித்து இந்தப் பூஜை செய்யப்படுகிறது.