சிவபூஜையில் ஐந்து வாத்தியங்கள் இசைப்பது நியதி. தோல் கருவிகள், துளைக் கருவிகள், நரம்புக் கருவிகள், உலோகக் கருவிகள், இயற்கையாய்த் தோன்றிய இசைக்கருவிகள் என ஐவகை கருவிகளால் இசைத்து இறைவனைப் பூஜிக்க வேண்டும். இந்த ஐவகை வாத்தியங்களே பஞ்சவாத்தியம் எனப்படும்.