வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை சித்திரை மாதம் சுக்லபட்சத்தில் சுவாமிக்கும் அம்பாளுக்கும் அபி ஷேகம் நடத்தப்படுகிறது. மறுநாள், கையாலேயே அரைத்த சந்தனத்தால் காப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. இந்த சந்தனக் காப்பு மறு வருடம் சித்திரை மாத சுக்ல பட்சத்தில்தான் களையப்பட்டு மீண்டும் பூசப்படும். இறைவன் திருமேனியில் தினமும் மாலை மட்டுமே சாத்தப்படும்.