கங்கை நீரை காவடி தூக்கி வந்து அபிஷேகம் செய்து ராமேஸ்வரத்தில் கொல்கத்தா பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஜூலை 2025 05:07
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் கொல்கத்தா பக்தர்கள் புனித கங்கை நீரை காவடியாக தூக்கி வந்து அபிஷேகம் செய்து சுவாமி தரிசனம் செய்தனர்.
மேற்குவங்கம் கொல்கத்தா உள்ள ஜெய்பாபா ஹம்பானந்த் மகராஜ் மடம் சார்பில் 15 பேர் பக்தர்கள் குழு ஜூலை 7ல் புனித கங்கை நீரை கலசத்தை காவடி தூக்கி கொல்கத்தா நகரில் ஊர்வலமாக வந்து ரயிலில் பயணம் செய்தனர். இக்குழு ஜூலை 13ல் மதுரை ரயில் நிலையம் வந்திறங்கினர். பின் அங்கிருந்து கங்கை நீரை காவடியாக தூக்கிக் கொண்டு நடைபயணமாக ராமேஸ்வரம் நோக்கி வந்தனர். இன்று காலை 9 மணிக்கு ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்த பக்தர்கள் குழு, ராமநாதசுவாமிக்கு கங்கை நீரை அபிஷேம் செய்து சுவாமி தரிசனம் செய்தனர். 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றான ராமேஸ்வரம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து பெரும் பாக்கியம் அடைந்தோம் என பக்தர்கள் தெரிவித்தனர்.