திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் மண்டல பூஜை துவங்கியது; 47 நாட்கள் நடக்கும்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஜூலை 2025 06:07
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மண்டல பூஜை இன்று தொடங்கியது. கோயிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. மண்டல பூஜை துவங்கும் வகையில் இன்று மாலை கம்பத்தடி மண்டபத்தில் சத்தியகிரீஸ்வரர், கோவர்த்தனாம்பிகை அம்பாள், மூலவர் முருகப்பெருமான் கரத்தில் உள்ள தங்கவேலுக்கு வெள்ளி குடங்களில் புனித நீர் நிரப்பி வைத்து பூஜை, தீபாராதனை நடந்தது. பின்பு வெள்ளி குடங்கள் மூலவர்கள் சன்னதிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு உற்ஸவர்கள் சத்யகிரீஸ்வரர், கோவர்த்தனாம்பிகை அம்பாள், வேலுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து 47 நாட்கள் இந்த அபிஷேகம் நடைபெறும். 48வது நாள் மண்டலாபிஷேகம் நடக்கும்.