தஞ்சையை அடுத்த வெண்ணாற்றங்கரை பகுதியில் 108 திவ்ய தேசங்களில் மூன்றாவது திவ்ய தேசமானதும், மாமணிக் கோயில்கள் என்று போற்றப்படும் ஸ்ரீதேவி, பூமிதேவி, ஸ்ரீ செங்கமலவல்லி நாயிகா சமேத நீலமேகப் பெருமாள் திருக்கோயில் உள்ளது, இத்திருக்கோயில் பல லட்சம் செலவில் புனரமைக்கப்பட்டு 13 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நேற்று (ஜுலை 14) நடைபெற்றது, அதனைத் தொடர்ந்து நேற்று மாலை ஸ்ரீ நீலமேகப் பெருமாள், ஸ்ரீ செங்கமலவல்லி தாயார் திருக்கல்யாணம் அதிவிமரிசையாக நடைபெற்றது, சுவாமிகளுக்கு மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்று, சுவாமிக்கு பட்டு வேட்டி, பட்டு சேலை அணிவித்து, கன்னிகாதானம் செய்வித்து பின்னர் வேத மந்திரங்கள் முழங்க பட்டாச்சாரியார்கள் யாகம் வளர்த்து சுவாமிக்கு மாங்கல்ய தாரணம் சிறப்பாக நடைபெற்று மஹா தீபாரதனை காட்டப்பட்டது, இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.