பெரியநாயக்கன்பாளையம் அருகே வெள்ளமடை ஊராட்சிக்கு உட்பட்ட சாமநாயக்கன்பாளையம் ஆண்டாள் திருநாச்சியார் சமேத ஸ்ரீ ரங்க மன்னார் திருக்கோயில் வளாகத்தில் ஏழுமலையப்பன் வெங்கடேஸ்வர பெருமாள்சாமி பிரதிஷ்டை செய்யும் விழா நடந்தது. நிகழ்ச்சியை ஒட்டி நேற்று முன்தினம் மாலை, 3:00 மணிக்கு பிரதிஷ்டை, சங்கல்பம், வாஸ்து சாந்தி, யாகசாலை பிரவேசம், முதல் கால ஹோம பூஜை, மகா தீபம், தீபாராதனை, இரவு திருப்பதி ஏழுமலையான் வெங்கடேஸ்வர சாமிக்கு மருந்து சாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு திருப்பல்லாண்டு, திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை, திவ்ய பிரபந்தம் பாராயணம், வெங்கடேச பெருமாள் பிரதிஷ்டை, தொடர் அலங்கார பூஜைகள், மதியம் அன்னதானம் நடந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருவிழா கமிட்டி குழு மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.