பதிவு செய்த நாள்
13
ஏப்
2015
11:04
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, பழையபேட்டை ஏழுர் பாரத கோவிலில், திரவுபதாம்பிகை அக்னி வசந்த மகோற்சவ மஹாபாரத விழா, கடந்த மாதம், 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று முதல், தினமும் மதியம், 2 மணி முதல் மாலை, 6 மணி வரை புலவர் கோவிந்தராஜின் மஹாபாரத விரிவுரையும், பொன்னுசாமியின் இன்னிசை கவி வாசிப்பும் நடந்தது. கடந்த மாதம், 30ம் தேதி முதல் தினமும் கிருஷ்ணகிரி பூந்தோட்டம் செல்வ விநாயகர் நாடக சபா சார்பில், குமரவேல் - சேகர் குழுவினரால் பாரத தெருக்கூத்து நாடங்கள் நடந்து வருகிறது. அதன்படி, 30ம் தேதி கிருஷ்ணன் பிறப்பு, 31ம் தேதி அம்பா அம்பாளிகை கல்யாணம், 1ம் தேதி பாண்டவர் பிறப்பு, 2ம் தேதி வில் வளைப்பும் திரௌபதி கல்யாணம், 3ம் தேதி சுபத்திரை மாலையிடுதல், 4ம் தேதி பகடை, திரவுபதி துயில், 5ம் தேதி சித்திரசேனன் சண்டை, 6ம் தேதி அர்ச்சுனன் தபசு, 7ம் தேதி குறவஞ்சி நாடகம், 8ம் தேதி அரவாண் கடபலி, 9ம் தேதி அபிமன்யூ சண்டை, 10ம் தேதி கர்ணன் சண்டை ஆகிய நாடகம் நடந்தது. நேற்று முன்தினம் இரவு, துரியோதனன் படுகளம் நாடகம் நடந்தது. நேற்று காலை துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. இதில், கிருஷ்ணகிரி பாப்பாரப்பட்டி, பெத்தனப்பள்ளி, கிட்டம்பட்டி, வேட்டியம்பட்டி, அவதானப்பட்டி, பெத்தம்டி, ன்னியத்தெரு, பெரியமோட்டூர், சின்னமோட்டூர், தண்டகுப்பம், ராயக்கோட்டையான் கொட்டாய், பங்காளி தெரு, பூந்தோட்டம், புதுப்பேட்டை, சவுளூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.