பதிவு செய்த நாள்
13
ஏப்
2015
11:04
திருச்சி: திருவெள்ளறை பெருமாள் கோவில் தேரோட்டம், இன்று நடக்கிறது. திருவெள்ளறை பெருமாள் கோவில் பங்குனி தேரோட்ட திருவிழா கடந்த, 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில், தினமும் இரவு பல்வேறு வாகனத்தில், பெருமாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார். கடந்த, 7ம் தேதி பெருமாள் தாயாருடன் கொள்ளிடம் ஆற்றில் தீர்த்தவாரி கண்டருளினார். நேற்று முன்தினம் இரவு, உபயநாச்சியார்களுடன் எழுந்தருளி பெருமாள் நெல் அளவு கண்டருளினார். பின், பூந்தேரில் எழுந்தருளி வீதியுலா வந்து சேவை சாதித்தார். எட்டாம் நாளான நேற்று, தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி வையாளி கண்டருளினார். தேரோட்டம் இன்று நடக்கிறது. இதையொட்டி அதிகாலை, தேரில் பெருமாள், தாயாருடன் எழுந்தருள்கிறார். காலை, 8 மணியளவில் தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது.