பதிவு செய்த நாள்
13
ஏப்
2015
11:04
உடுமலை : உடுமலை மாரியம்மன் கோவிலில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, நாளை மாலை திருவிளக்கு பூஜை நடக்கிறது. உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, நாளை காலை, 6:00 மணிக்கு, மங்கள இசையும், 6:15 மணிக்கு, அம்மனுக்கு, சிறப்பு அபிேஷகம், தங்க கவசம் சாத்துதலும், 6:30 மணிக்கு, நைவேத்தியம், மகா தீபாராதனையும் நடக்கிறது.மாலை வரை, சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடக்கின்றன. மாலை, 5:00 மணிக்கு, மங்கள இசையும், 5:30 மணிக்கு, விநாயகர் வழிபாடும், 5:45 மணி முதல் இரவு, 7:00 மணி வரை, திருவிளக்கு பூஜையும், தொடர்ந்து தீபாராதனையும் நடக்கிறது.இரவு, 7:15 மணிக்கு, முதல் திருமுறையும், தமிழ்ப்புத்தாண்டும் என்ற தலைப்பில், சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடக்கிறது. திருவிளக்கு பூஜையில் பங்கேற்க விரும்புவோர், கோவில் அலுவலகத்தில் ரூ.100 கட்டணம் செலுத்தி, தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம்; பூஜைக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் கோவிலில் வழங்கப்படும். குத்துவிளக்கு மற்றும் பஞ்ச பாத்திரம் உத்தரணியை மட்டும் பக்தர்கள் கொண்டு வரவேண்டும். இத்தகவலை, உடுமலை மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் சங்கரசுந்தரேசுவரன் தெரிவித்துள்ளார்.