வேலாயுதம்பாளையம்: கரூர் மாவட்டம், வேட்டமங்கலம் நொய்யல் செல்லாண்டியம்மன் கோவில் திருவிழா அம்மனுக்கு காப்புகட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து, அம்மை அழைத்தல், அம்மன் ஊஞ்சல் ஆடுதல், அம்மன் ரதம் ஏறுதல், மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. திருத்தேரை பொதுமக்கள் வடம் பிடித்து இழுத்தனர். நொய்யலில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக சென்று, பின் தேர் நிலை சேர்ந்தது. ஏராளமான பக்தர்கள் ஸ்வாமி தரிசனம் செய்தனர்.