பதிவு செய்த நாள்
15
ஏப்
2015
12:04
பவானி: சித்திரை பிறப்பை முன்னிட்டு, பவானி, தேவபுரம் கருமாரியம்மன், பண்ணாரியம்மன், சமயபுரம் மாரியம்மன், கணபதி, முருகன் கோவில்கள் சார்பில், சித்திரை திருவிழா நடந்தது. கோவில் முன் கொடி கம்பம் நடப்பட்டு, விழா துவங்கியது. நேற்று காலை, கூடுதுறை சென்று, அப்பகுதி பொதுமக்கள் தீர்த்த குடம் எடுத்து, ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக, நடன குதிரையுடன், மேள தாளங்கள் முழங்க கோவிலை அடைந்தனர். பின், கோவிலில் உள்ள கருமாரியம்மனுக்கு, சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, மஹா தீபாராதனையும், தொடர்ந்து அன்னதானமும் நடந்தது. தர்மகர்த்தா மாதுசாமி, தி.மு.க., நகர செயலாளர் நாகராசன், தலைமை கழக பேச்சாளர் கண்ணன், விழா கமிட்டியாளர்கள் மாதேஸ்வரன், முருகேசன், சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர்.