மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு பகுதியில் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு லட்ச தீப விழா நடந்தது. மூங்கில்துறைப்பட்டு ஆலை வளாகத்தில் உள்ள பிள்ளையார் கோவில், இராவத்தநல்லூரில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் லட்சதீப விழா நடந்தது. அப்பகுதியில் கிராம மக்கள் திரளாக கலந்துக் கொண்டு சுவாமியை வழிப்பட்டனர். ராவத்தநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலில் லட்ச மலர்கள், வெற்றிலை, துளசி, வடை, முறுக்கு ஆகியவற்றால் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்தனர். மாலை கோவில் வளாகத்தில் லட்ச தீபங்கள் ஏற்றி வழிபட்டனர்.