மஞ்சூர் : மஞ்சூர் ஐயப்பன் கோவிலில் விஷு கனி உற்சவம் நடந்தது.
மஞ்சூரில் உள்ள தர்ம சாஸ்தா ஐயப்பன் கோவிலில், மலையாள வருடப்பிறப்பை முன்னிட்டு விஷுகனி உற்சவம் கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு ஐயப்பனுக்கு, நெய், பால் இளநீர், சந்தனம், பன்னீர் உட்பட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. தொடர்ந்து பல வகையான பழங்கள் படைக்கப்பட்டு, விஷு கனி காணும் நிகழ்ச்சி நடந்தது. இதை காண மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கோவிலில் குவிந்தனர்.