செஞ்சி: சிட்டாம்பூண்டி சையத் முஸ்தபா ஷா அவுலியா தர்காவில் சந்தனக் கூடு உற்சவம் நடந்தது. செஞ்சி தாலுகா சிட்டாம்பூண்டி சையத் முஸ்தபா ஷா அவுலியா தர்காவில் 70 வது ஆண்டு சந்தனகூடு விழா நேற்று முன்தினம் இரவு நடந்தது. அன்று மாலை 7 மணிக்கு ஹசரத் தர்பாரில் சந்தனம் ஏற்றி இறைவேதம் ஓதினர். மலர்போர்வை சாற்றி, அனைவரின் நலனுக்காக தொழுகை நடத்தி தப்ரூக் வழங்கினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு விருந்தும், இரவு 9 மணிக்கு தமிழ் இஸ்லாமிய இசை நிகழ்ச்சியும் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை பரம்பரை தர்கா டிரஸ்டி ஜாவித் அலி, உருஸ் ஒருங்கிணைப்பாளர் அலிஅகமத் ஆகியோர் செய்திருந்தனர். அனந்தபுரம் போலீ சார் பாதுகாப்பு பணிகளை செய்தனர்.