திண்டிவனம்: மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாருக்கு திண்டிவனத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. விக்கிரவாண்டி அடுத்த வழுதாவூரில் நடந்த கோவில் நிகழ்ச்சிக்கு செல்லும் வழியில், நேற்று காலை திண்டிவனம் மேம்பாலம் அருகே மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாருக்கு வரவேற்பு அளிக்கப் பட்டது. ஸ்ரீஆதிபராசக்தி வழிபாட்டு மன்ற தலைவர் ரத்னவேலு, துணைத் தலைவர் சுகுமார், செயலாளர் ரவி ஆகியோர் தலைமையில் வரவேற்பு அளித்தனர். நிகழ்ச்சியில் பஸ் உரிமையாளர் ராதாகிருஷ்ணன், தர்மலிங்கம், கதிர்வேலு, காசி, சேகர், பிர்லா செல்வம் உட்பட பலர் கலந் துக் கொண்டனர். முன்னதாக பங்காரு அடிகளாருக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.