மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா இன்று (ஏப்.,21) கொடியேற்றத்துடன் துவங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் ஏப்.,30ல் நடக்கிறது. இதை முன்னிட்டு கட்டண டிக்கெட் முன்பதிவு இன்று துவங்கி ஏப்.,25 வரை நடக்கிறது. ரேஷன்கார்டு, பான்கார்டு, பாஸ்போர்ட், ஆதார், டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட ஒன்றுடன் www.maduraimeenakshi.org இணையதளம் வழியாக முன்பதிவு செய்யலாம். கட்டணம் ரூ.500 மற்றும் ரூ.200. அதிகம் பேர் முன்பதிவு செய்யும்பட்சத்தில் குலுக்கல் முறையில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். தெற்கு கோபுரம் வழியாக ஆறாயிரம் பேருக்கு இலவச அனுமதி வழங்கப்படும்.