சிந்தாதிரிப்பேட்டை: சிந்தாதிரிப்பேட்டை, அணைக்கட்டு துலுக்கானத்தம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடைபெறுகிறது. சிந்தாதிரிப்பேட்டையில், இந்து சமய அறநிலைய துறைக்கு உட்பட்ட, அணைக்கட்டு துலுக்கானத்தம்மன் கோவில் உள்ளது. புனரமைக்கப்பட்ட அந்த கோவிலில், வரும், 22ம் தேதி காலை 9:00 முதல் 10:30 மணிக்குள், ஜீர்ணோத்தாரண அஷ்டபந்த மகாகும்பாபிஷேகம் நடைபெறுகிறது. மகாகும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நேற்று விநாயகர் பூஜை, லட்சுமி, நவகிரக ஹோமங்கள் நடைபெற்றன. ஆதிபுரீஸ்வரர் கோவிலிலிருந்து கைலாய வாத்திய இசை முழங்க, முக்கிய வீதிகள் வழியாக, நவபுண்ணிய தீர்த்தங்கள் ஊர்வலமாக யாக சாலைக்கு எடுத்து வரப்பட்டன.