பதிவு செய்த நாள்
22
ஏப்
2015
01:04
குன்றத்துார்: குன்றத்துார் காமாட்சி அம்மன், நாகேஸ்வர சுவாமி கோவிலில், இன்று முதல், மே
மாதம் 3ம் தேதி வரை பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது.
ஏப்., 23ம் தேதி, கொடியேற்றம்; 25ம் தேதி, காலையில் அதிகார நந்தி சேவை, மாலையில், பூத
வாகனங்களில் வீதியுலா நடக்க உள்ளன. வரும், 27ம் தேதி, மாலை ரிஷப வாகன சேவை; 29ம்
தேதி காலை தேரோட்டம், மாலை தேரிலிருந்து கோவிலுக்கு சுவாமி எழுந்தருளல் ஆகியவை
நடக்கின்றன. மே மாதம், 2ம் தேதி, காலை நடராஜர் தரிசனம், மாலை திருக்கல்யாண விழா
நடக்கின்றன. அன்று இரவு, தங்க ரிஷப வாகனத்தில், சுவாமி வீதியுலா நடக்கிறது.