கோபி:கோபி, பவளமலை முத்துக்குமாரஸ்வாமி கோவிலில், அட்சய திரிதி மற்றும் கிருத்திகையை முன்னிட்டு, நேற்று சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.காலை, 7 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 7.30 மணிக்கு கோமாதா பூஜை, 8 மணிக்கு சத்ரு சம்ஹார திரிசதை அர்ச்சனை, 9 மணிக்கு தீபாராதனை நடந்தது. காலை, 10 மணிக்கு சத்ரு சம்ஹார யாகம், 12 மணிக்கு மகா தீபாராதனை மற்றும் முத்துக்குமார ஸ்வாமி புறப்பாடு நடந்தது. மதியம், 1 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள், பூஜையில் கலந்து கொண்டனர்.