கம்பம் : கம்பம் கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா நேற்று சாட்டுதல் செய்யப்பட்டு இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
கம்பம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது கவுமாரியம்மன் கோயில். சுயும்புவாக அம்மன் எழுந்தருளியுள்ளது இந்த கோயிலின் சிறப்பம்சம். ஆண்டுதோறும் 21 நாட்கள் சித்திரை திருவிழா கொண்டாடப்படும். திருவிழாவிற்கான சாட்டுதல் நேற்று நடந்தது. கொடியேற்று விழாவவிற்கு முன்னதாக கம்பராயப்பெருமாள் கோயிலில் வைக்கப்பட்ட உற்சவர் அழைக்கப்பட்டு கோயில் வளாகத்தில் எழுந்தருள்வார். தொடர்ந்து முக்கொம்பு மற்றும் கரகத்துடன் ஊர்வலம் நடைபெற்று இன்று மாலை கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கும். திருவிழாவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமூகத்தவரின் மண்டகப்படி நடைபெறும். மே 6 ல் பெருந்திருவிழா நடைபெறும். அன்றைய தினம் பக்தர்கள் அக்னிச்சட்டி, பொங்கல் வைத்தல், அலகு குத்துதல், ஆயிரம் கண்பானை போன்ற நேர்த்திக்கடன்களை செலுத்துவர்.
இன்று முதல் தினமும் பக்தர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் தேனியில் இருந்து வீரபாண்டிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. காலை 6 முதல் இரவு 9 மணி வரை தேனி புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து பஸ்கள் இயக்கப்படுகிறது.