பதிவு செய்த நாள்
22
ஏப்
2015
02:04
ராமநாதபுரம் : ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட மீனாட்சி அம்பிகை சொக்கநாதசுவாமி கோயில் சித்திரை திருவிழா நேற்று(ஏப்.21) காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடிமரத்திற்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைக்கு பின் கொடி ஏற்றப்பட்டது. மாலையில் அம்மன் மீனாட்சி அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
இனிவரும் நாட்களில் காமாட்சி, முருகனுக்கு வேல் கொடுத்தல், ஞானப்பால் ஊட்டல், பிட்டுக்கு மண் சுமந்த காட்சி அலங்காரம், அம்மன் தபசு கோலத்தில் சுவாமி அருள்பாலிக்க உள்ளார். ஏப்., 28 ல் பட்டாபிஷேகம், ஏப்., 29 ல் திக்விஜயம், ஏப்., 30 ல் மீனாட்சி சொக்கநாதசுவாமிக்கு திருக்கல்யாணம், மே 1ல் ஊஞ்சல் காட்சி, மே 2 இரவு சுவாமி வீதியுலா நடக்கிறது. ஏற்பாடுகளை திவான் மகேந்திரன், சரக அலுவலர் சுவாமிநாதன், பேஷ்கர் கண்ணன், பூஜகர் மனோகர குருக்கள் செய்துள்ளனர்.