வேதாரண்யம்:வேதாரண்யம் அடுத்த ராஜாளிக்காட்டில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், ஆண்டு பெருவிழாவையொட்டி கொப்பரைத் திருவிழா நடந்தது. விழாவில், ஏராளமான பக்தர்கள் மாவிளக்கு போட்டும், காவடி எடுத்தும் வேண்டுதலை நிறைவேற்றி அம்மனை வழிபட்டனர்.அலங்கரிக்கப்பட்ட சிம்ம வாகனத்தில் அம்மன் முத்து பல்லக்கில் எழுந்தருளி, வேதாரண்யம் நகரில் வீதியுலா காட்சி நடந்தது. வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் அர்ச்சனை செய்து, அம்மனை வழிபட்டனர். அதிகாலையில் கோவிலில் பக்தர்கள் அக்னி கொப்பரை எடுத்து ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.