பதிவு செய்த நாள்
24
ஏப்
2015
12:04
நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே உள்ள இருளப்பபுரம் பசுபதீஸ்வரர்-பிரசன்ன பார்வதி ÷கோவில் திருப்பணிகம் முடிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கும்பாபிஷேக விழா கடந்த 20-ம் தேதி தொடங்கியது. அதனைத் தொடர்ந்துயாகசாலை பூஜைகள், நவக்கிர ஹோமம், லெட்சுமி ஹோமம், தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விராவின் முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் நெடைபெற்றதையொட்டி காலையில் 4-ம் காலயாக சாலை பூஜையும், ஹோமம், தீபாராதனை, யாத்ராதானம்,கடம்புறப்பாட ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. காலை 9 மணிக்கு கோவில் விமானகோபுர கலசம், ராஜகோபுரம், மூலஸ்தான கோபுரங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான ப்தர்கள் கலந்து கொண்டனர். விழாவில் சிவதேவஸ்தான தலைவர் வக்கீல் உதயகுமார், செயலாளர் ராஜகுமார் பொருளாளர் ஸ்ரீகிருஷ்ணன், திருப்பணி மற்றும் கும்பாபிஷேக விழா கமிட்டி தலைவர் விஷ்ணுராம், செயலாளர் தனபாலன், பொருளாளர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அம்பை ஸ்ரீராமகிருஷ்ணா ஆசிரம தலைவர் சுவாமிராமகிருஷ்ணா நந்தஜி மகராஜ் சுவாமி செங்கோல் ஆதீனம் ஆகியோர் ஆசியுரை வழங்கினார். இதில் எம்.எல்.ஏ.க்கள் கே.டி.பச்சைமால். நாஞ்சில் முருகேசன். முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், நாடார் மகாஜன சங்க பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ். நகரசபை தலைவி மீனாதேவ், 38-வது வார்டு கவுன்சிலர் சுதா ராதாகிருஷ்ணன் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். கும்பாபிஷேகத்தை தொடர்ந்து அன்னதானமும், மாலையில் மகா அபிஷேகமும், இரவில் திருக்கல்யாணம், தீபாரதனை,ஆன்மிக சொற்பொழிவு ஆகியவை நடைபெற்றது. கோவிலில் சித்திரை திருவிழா மற்றும் கும்பாபிஷேக மண்டல விழா இன்று தொடங்குகிறது.