கம்மாபுரம்: விளக்கப்பாடி பாலமுருகன் கோவிலில் இன்று சித்திரை சஷ்டி காவடி திருவிழா நடக்கிறது. சித்திரை சஷ்டி காவடி திருவிழாவையொட்டி, கடந்த 18ம் தேதி கொடியேற்றம் நடந்தது. தினமும், காலை 7:00 மணிக்கு பாலமுருகன், வள்ளி, தெய்வானை சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனை, மாலை 4:00 மணிக்கு சிறப்பு பூஜை, இரவு சுவாமி வீதியுலா நடந்தது. இன்று (24ம் தேதி) காலை 6:00 மணிக்கு அபிஷேக ஆராதனை, காலை 9:00 மணியளவில் மேலக்குளத்திலிருந்து காவடி, பால்குடம் சுமந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.