திருச்சி அருகிலுள்ள திருவானைக்காவல் கோயிலில் அம்பிகை அகிலாண்டேஸ்வரி தினமும் பகல் பூஜையின் போது சுவாமி சன்னதிக்கு எழுந்தருளி தன் கணவருக்கு பூஜை செய்யும் சடங்கு நடத்தப்படுகிறது. மாங்கல்ய பலம் நிலைக்கவும், திருமணத்தடைகள் நீங்கவும் வேண்டி இந்த பூஜையின் போது பெண்கள் குவிவார்கள். ஆடி வெள்ளிக்கிழமைகளில் இங்கு கூட்டம் அலை மோதும். இக்கோயிலில் சாதாரணமாக இரவு 9 மணிக்கு நடை சாத்துவது வழக்கம். ஆனால், ஆடி வெள்ளியன்று அம்மன் சன்னதி விடிய விடிய திறந்தே இருக்கும்.