உளுந்தை:உளுந்தை வெங்கடேச பெருமாள் கோவிலில், வரும் 3ம் தேதி கருட சேவையும், திருக்கல்யாணமும் நடைபெற உள்ளது. கடம்பத்துார் ஒன்றியம், மப்பேடு அடுத்துள்ளது உளுந்தை ஊராட்சி. இங்குள்ள வெங்கடேச பெருமாள் கோவிலில், ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, வெங்கடேச பெருமாளுக்கு, கருடசேவையும், ஸ்ரீவாரி திருக்கல்யாண உற்சவம் நடைபெறும்.காலை 9:00 மணிக்கு திருவேந்தி காப்பு; காலை 9:30 மணிக்கு மகா சாந்தி ஹோமம்; பகல் 11:00 மணிக்கு மகா சாந்தி திருமஞ்சனம்; பகல் 1:00 மணிக்கு விசேஷ தீபாராதனை; மாலை 4:30 மணிக்கு ஸ்ரீவாரி திருக்கல்யாணம்; மாலை 6:00 மணிக்கு மஹோத்சவ உற்சவம்; இரவு 7:00 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீவாரி வீதியுலா உள்ளிட்டவை நடைபெற உள்ளன.திருக்கல்யாண வைபவம் திருமலை - திருப்பதி தேவஸ்தான அர்ச்சகர்களால் நடைபெற உள்ளது.