அவலூர்பேட்டை: அவலூர்பேட்டை ராமலிங்க சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம், வரும் 1ம் தேதி நடக்கிறது. மேல்மலையனூர் ஒன்றியம், அவலூர்பேட்டை ராமலிங்க சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, வரும் 29ம் தேதி காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமமும், இரவு 9:00 மணிக்கு யாகசாலை பிரவேசம் நடக்கிறது. 30ம் தேதி காலையில் சிவபுராணம், முதல் கால ஹோமம், இரவு 9:00 மணிக்கு யந்தரஸ்தாபனம், அஷ்டபந்தனம், நாடிசந்தானம் நடக்கிறது. இதனை தொடர்ந்து வரும் 1ம் தேதி காலை 9:00 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை தெலுங்கு தேவாங்கர் சமூகத்தினர் செய்து வருகின்றனர்.