நாகர்கோவில் : வெள்ளிமலை விவேகானந்தா ஆசிரம தலைவர் சுவாமி சைதன்யானந்தஜி மகராஜ் நாகர்கோவிலில் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக கேரள எல்லையான பத்துகாணியில் காளிமலை அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து மூவாயிரம் அடி உயரத்தில் உள்ள இந்த காளி மலைக்கு பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொண்டு அம்மனை வழிபடுவார்கள். இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமி பொங்கல் விழா 27-ம்தேதி தொடங்கி 3-ம் தேதி வரை நடைபெறுகிறது. மே மூன்றாம் தேதி காலை ஒன்பது மணிக்கு சித்ரா பவுர்ணமி பொங்காலை நடக்கிறது. இதில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பார்கள். இதையொட்டி காளிமலை புனித யாத்திரை பத்துகாணியில் இருந்து 27-ம் தேதி மாலை ஐந்து மணிக்கு தொடங்கும். விழாவையொட்டி மார்த்தாண்டம் மற்றும் திருவட்டாரில் இருந்து சிறப்பு பஸ்வசதி செய்யப்பட்டுள்ளது.