பதிவு செய்த நாள்
29
ஏப்
2015
12:04
நகரி: சித்துார் மாவட்டம், நாகலாபுரம் டவுனில் உள்ள வேத நாராயண சுவாமி கோவிலில், ஆண்டு பிரம்மோற்சவம், மே 3ம் தேதி முதல், மே 11ம் தேதி வரை (ஒன்பது நாட்கள்) நடைபெறுகிறது. இக்கோவிலில் ஆண்டு பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, வரும், 30ம் தேதி, கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுகிறது. மே 3ம் தேதி, காலை, கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் துவங்குகிறது. மூலவருக்கு மற்றும் கோவில் பரிவார தேவைகளுக்கும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. அன்று மாலை, 6:00 மணி முதல், இரவு, 8:30 மணி வரை, சுவாமி உபதேவியர் உடன் பெரிய சேஷ வாகனத்தில் எழுந்தருளி, மாடவீதியில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். வரும், 10ம் தேதி, திருத்தேர் நடக்கிறது. அன்று மாலை, 6:00 மணிக்கு சுவாமிக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடக்கிறது.
நிகழ்ச்சி நிரல்
தேதி நேரம் உற்சவம்
மே 3 -காலை 6:00 மணி- கொடியேற்றம் மாலை 6:00 மணி- பெரிய சேஷ வாகனம்
மே 4- காலை 9:00 மணி- சின்ன சேஷ வாகனம் மாலை 6:00 மணி- அம்ச வாகனம்
மே 5 -காலை 10:00 மணி- சிம்ம வாகனம் மாலை 6:00 மணி -முத்துபந்தல் வாகனம்
மே 6 -காலை 9:00 மணி- கல்பவிருட்ச வாகனம் இரவு 7:00 மணி சர்வபூபால வாகனம்
மே 7- காலை 10:00 மணி -மோகினி அவதாரம் மாலை 5:00 மணி- கருட வாகனம்
மே 8 -காலை 9:00 மணி -அனுமந்த வாகனம் மாலை 6:00 மணி- கஜ வாகனம்
மே 9 காலை 11:00 மணி -சூர்ய பிரபை மாலை 6:00 மணி சந்திர பிரபை
மே 10- காலை 10:00 மணி- ரதம் உற்சவம் இரவு 7:00 மணி- திருக்கல்யாண உற்சவம்
மே 11 -காலை 8:00 மணி- சக்கரஸ்தனம் நண்பகல் 11:00 மணி கொடி இறக்கம்.