திண்டிவனம்: திண்டிவனத்தில் வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு, 108 பால்குட ஊர்வலம் நடந்தது. திண்டிவனம் பெருமாள் கோவில் தெருவில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலிலிருந்து ஊர்வலம் துவங்கியது. ஊர்வலம் மாடவீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை அடைந்தது. கோவிலில் அம்மனுக்கு 108 பால்குட அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அம்மனுக்கு பூஜை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு அம்மன் வீதியுலா நடந்தது. வாசவி கிளப் தலைவர் பிரபாகரன், மக்கள் தொடர் பாளர் பிரபாகரன், ஆசிரியர் சிவக்குமார், ஒருங்கிணைப்பளார் வெங்கட்ரமணன், வாசவி வனிதா கிளப் நிர்வாகிகள் சந்திரகலா சங்கர், கோமதி பட்டாபிராமன், சாந்தி பாபுரமேஷ் கலந்துக் கொண்டனர்.