பதிவு செய்த நாள்
30
ஏப்
2015
11:04
விழுப்புரம்: கல்பட்டு முத்தாலவாழியம்மன் கோவிலில் சித்திரை தேரோட்டம் நடந்தது. விழுப்புரம் அடுத்த கல்பட்டு முத்தாலவாழியம்மன் கோவி லில் சித்திரை திருவிழா கடந்த 21ம் தேதி துவங்கியது. தொடர்ந்து தினந்தோறும் நடந்த விழாவில், கல்பட்டு, சிறுவாக்கூர், நத்தமேடு கிராமங்களில் இரவு சுவாமி வீதியுலா நடந்தது. ஒன்பதாம் நாள் விழாவான, நேற்று தேர் திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. மாலை 6:50 மணிக்கு முத்தாலவாழியம்மன் சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட தேரில் வீதியுலா நடந்தது. இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா சண்முகம், சுப் ரமணி, ரகோத்தமன், ராஜேந்திரன், சிவா, ஊராட்சி தலைவர் கல்விராயன், காணை ஒன்றிய துணை சேர்மன் முத்தமிழ்செல்வன், மாவட்ட கவுன்சிலர் ராமலிங்கம், சிறுவாக்கூர் ஊராட்சி தலைவர் ஜெயபால் ஆகியோர் செய்திருந்தனர்.