திண்டுக்கல்: திண்டுக்கல் வெள்ளை விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. இந்த கோயில் திருப்பணி சில மாதங்களுக்கு முன் துவங்கியது. கருங்கற்களால் ஆன கற்பகிரகம், ஏகதள விமானம், மஹா மண்டபம், பிரகார விமானம் போன்றவை அழகுற அமைக்கப்பட்டுள்ளன. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று மாலை 5:30 மணிக்கு முதல் யாகசாலை பூஜை நடந்தது. இரவு 9 மணிக்கு பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. இன்று காலை 2 ம் கால யாக பூஜை, மாலை 6 மணிக்கு 3 ம் கால யாக பூஜையும், மே 1 காலை 7 மணிக்கு 4 ம் கால யாக பூஜையும் நடக்கின்றன. காலை 9:30 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. காலை 12 மணிக்கு அன்னதானமும், இரவு அலங்கார மின்ரதத்தில் வீதி உலா நடக்கின்றன.