திண்டிவனம்: தீவனூர் விநாயகருக்கு 1008 பால்குட அபிஷேகம் நடந்தது. திண்டிவனம் அடுத்த தீவனூர் சுயம்பு பொய்யா மொழி விநாயகர் ÷ காவிலில், கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா துவங்கியது. தினமும் சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. நேற்று காலை 7 வது நாள் உற்சவத்தை முன்னிட்டு மூலவருக்கு அதிகாலை மகா அபிஷேகமும், சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து புதுச் சேரி சிவன் கோவில் குருக்கள் குழுவினரால் கணபதி ஹோமம் நடந்தது. காலை 11:00 மணிக்கு, கோவிலில் இருந்து உற்சவமூர்த்தி சிறப்பு அலங்காரத்துடன், 1008 பால்குட ஊர்வலத்துடன் வீதியுலா நடந்தது. ஊர்வலம் கோவிலை அடைந்ததும் மூலவருக்கு நண்பகல் 12:00 மணிக்கு, பால் அபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று (30ம் தேதி) இரவு திருப்பூநுõல் கல்யாணமும், நாளை காலை 10 மணிக்கு தேரோட்டமும் நடக்கவுள்ளது. விழா ஏற்பாடுகளை பரம்பரை தர்மகர்த்தா சகுந்தலா அம்மாள் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.