ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த எடுத்தனூர் கோவில் கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஏப் 2015 12:04
ரிஷிவந்தியம்: எடுத்தனூர் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த உண்ணா மலை அம்மன், அண்ணாமலையார் மற்றும் துர்க்கையம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. ரிஷிவந்தியம் அடுத்த எடுத்தனூர் கிராமத்தில் 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த உண்ணாமலை அம்மன் சமேத அண்ணாமலையார், துர்க்கையம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த விஷ்ணுதுர்கை (மகிஷாசுரமர்த்தினி)சுவாமி வடக்குதிசை நோக்கியபடி தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளார். இந்த சிலை மலையமான் திருமுடிச்சாரி அரசின் மர பினர் ஆண்ட காலத்தில் சாளுக்கிய சிற்பிகளால் நிறுவப்பட்டது. காலப்போக்கில் சிதிலமடைந்த இக்கோவில், கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை நிறுவிய கணபதி ஸ்தபதியால் புணரமைக்கப்பட்டு, கடந்த 1990ம் ஆண்டில் கும்பாபிஷேகம் செய்து வைக்கப்பட்டது.தற்போது கள்ளக்குறிச்சி தொகுதி முன்னாள் எம்.பி., தெய்வீகன் தலைமையிலான குழுவினர், கோவிலை புணரமைத்து புதிதாக 16கால் மகா மண்டபம் கட்டியுள்ளனர். மே லும் ரிஷிகள் வழிபட்ட சிதிலமடைந்த அண்ணாமலையார் கோவிலும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இரண்டு கோவில்களுக்கும் நாளை (1ம் தேதி) காலை 7:00 மணி முதல் 8:30 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. முன்னதாக இன்று மாலை 6:00 மணிக்கு பேராசிரியர் ராமு தலைமையில், ஆன்மிக பட்டி மன்ற நிகழ்ச்சி நடக்கிறது.