பதிவு செய்த நாள்
30
ஏப்
2015
02:04
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் 3 இடத்தில் கண்காணிப்பு கேமராக்கள் öாருத்தப்பட்டுள்ளது.திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில், கும்பாபிஷேகம் நடக்க வுள்ள நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு 6 சுவாமி சிலைகள் திருடு போனது. இதனால், பக்தர்கள் கவலை யடைந்தனர். எஸ்.பி., மயில்வாகனன் உத்தரவுப்படி, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி இருந்திருந்தால், சிலை திருடர்களை அடையாளம் கண்டுபிடித்து கைது செய்திருக்கலாம். இக்கோயிலில் ஆதிரெத்தினேஸ்வரர், சிநேகவல்லி தாயார் சந்நதிகள் தனித் தனியாக உள்ளன. நீண்ட பிரகாரங்கள் கொண்ட இக்கோயிலுக்குள், நேற்று முன்தினம் 3 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களும், அபாய மணியும் பொருத்தப்பட்டது. ஆனால்,15 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தினால் மட்டுமே, கோயிலுக்குள் வரும் அனைவரையும் அடையாளம் காணமுடியும். இது குறித்து பக்தர்கள் கூறுகையில், ""தற்போது பொருத்தப்பட்டுள்ள 3 கண்காணிப்பு கேமராக்களால் எந்த பயனும் இல்லை. திருடர்கள் கேமரா இருக்கும் இடத்தை தவிர்த்து மற்ற இடங்களில் தப்பி செல்ல வாய்ப்புள்ளது. எனவே 15க்கும் மேற்பட்ட இடங்களில் கேமராக்கள் பொருத்த வேண்டும். இரவு காவலர் நியமிக்க வேண்டும், என்றனர்.